வெள்ளி, 4 மார்ச், 2011

தமிழ் இனி மெல்ல சாகும்


படிக்கும் போதும் எம் மொழி பற்றி அறிய முற்படவில்லை..
படித்தபின் வேறு ஒரு நிலை..
வேறு ஒரு பயணம்..
வேறு ஒரு வீடு...
வேறு ஒரு மொழி..
என்று வாழ்க்கை ஓட்டத்தை ரசிக்கும் எம் தோழரே கேளுங்கள்..
என் தாயிற்க்கு தெரியாத மொழி
எப்படி என் தாய்மொழியயிர்று ..

உலகத்தோர் அனைவரும் எம்மொழி பின் பற்ற துடிக்கையில்..
இவன் மட்டும் அந்நியம் தேடுகின்றான்..
உலகத்தோர் அனைவரும எம் இலக்கியம் தேடுகையில்..
அந்நிய மொழி வேட்கை கொள்கிறான்...

பல லட்சம் நூற்றாண்டுகள் பயணித்த மொழியினை..
சில நூற்றாண்டுகள் கடத்தவன் மொழி கொண்டு ஆள்கிறான்..
உணர்வுகளால் உயிர்தேல வேண்டிய தோழ்களை கொண்டு
அந்நிய மொழி தாங்கி நிற்கிறான்....

மொழி என்பது அறிவு எனும் என் தோழா..
பாரதி கற்றது முன்று மொழி இலக்கியங்கள்
எனினும்...
யாம் கண்ட மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம் என்றார்...
அவரை விடவா உனக்கு இலக்கியம் தெரியும்...

விழிபடயாத உன்னிரு கண்கள் மூடியே கிடக்கட்டும்..
நீயும் விழிக்க மாட்டாய்....
விழித்தவனையும் கேளிசெயவாய்..
எதில் குற்றம் கண்டாய்நீ வெறுக்க...
எம் இலக்கியத்தில்
நீ தேடும் அந்தனையும் உண்டு..
காமம்..காதல்..
மதம்..ஒற்றுமை..
சமூகவியல்...அறிவியல்..
பக்தி...தொழில்...
என்ன இல்லை எம்மிடம்....
விழித்தால் ் தான் தெரியும்...
முடியும் என்று முயற்சித்து பார்..
தொட்ட பின் விழக முடியாது உன்னால்..