திங்கள், 27 ஜனவரி, 2014

மனித உயிர் விலை மதிப்பற்றது

இந்த வாரம் இதழ்

மேலை நாடுகளில் உள்ள ரயில் பெட்டிகளில், எங்காவது மின் கசிவு ஏற்பட்டால் மின்சாரம் உடனே தடைப்படும். எங்காவது  புகையத் தொடங்கினால், அலாரம் ஒலித்து, உடனே ரயில் தானாகவே நின்றுவிடும். அதற்கான தொழில்நுட்பங்கள் நடைமுறையில் உள்ளன. அதை நாமே கூட இந்தியாவில் உருவாக்கிப் பயன்படுத்த முடியும்.

ஆனால் நம் ரயில் பெட்டிகளில் சாதாரண தீயணைப்புக் கருவிகூட கிடையாது அல்லது அது எங்கிருக்கிறது என்றுகூடப் பயணிகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு பெட்டியிலும் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, அவை அபாயச் சங்கிலியைப்போலப் பயணிகள் கவனம் பெறும் வகையில் குறிப்பிடப்பட வேண்டும்.

விமானங்களில், விபத்துகளின்போது வெளியேறும் அவசர வழிகள் தெள்ளத் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும். அதைக் குறித்து ஒவ்வொரு பயணத்தின்போதும் பணியாளர் ஒருவர் விளக்குவதும் வழக்கம். ரயில் பெட்டிகளில் பணியாளர்களைக் கொண்டு விளக்குவது என்பது நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால் அவசர வழிகள், அதைக் குறித்த கையேடுகள், பெட்டிகளில் ஒட்டக் கூடிய ஸ்டிக்கர்கள் இவையெல்லாம் சாத்தியமானவையே. இதைக் குறித்த வீடியோ காட்சிகளைக்கூடத் தயாரித்து ரயில் நிலையங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பலாம்.

தொழில்நுட்பம், அக்கறை, விழிப்புணர்வு எனச் சிறிதும் பெரிதுமான நடவடிக்கைகள் ஆட்டம் காணும் நம்பிக்கையை மீட்டெடுக்கத் தேவை என்று ரயில்வே நிர்வாகம் உணர வேண்டும். அதைவிட அது முதலில் உணர வேண்டியது, மனித உயிர் விலை மதிப்பற்றது என்பதை. அந்த எண்ணம் வந்தால் எல்லாம், தானே பின்னால் வரும், என்ஜினுக்குப் பின் வரும் ரயில் பெட்டிகள் போல.

மகளின் செருப்பு களவு போனபோது


பென்சில்! :-)@ikirukkan 9h 

பறவை பறத்தலின் சமயம் உதிர்ந்த இறகு ஒன்று தரை வந்தடையும் வரை பறக்கும் தகுதியுடையதாகிறது!!

புலவர் அண்ணாமலை. @indirajithguru 15h

மகளின் செருப்பு களவு போனபோது, நான் கவலைப்பட்டது ஒன்றை நினைத்துதான்..! களவாடியது கையாக இருக்கவேண்டும், காலாக இருக்கக் கூடாது..!
14-12-2013
Iyyanars*@iyyanars 10h 

ரத்தத்தை உறிஞ்சும் கொசுவுக்குப் பதிலாக,கொழுப்பை உறிஞ்சும் கொசுவாக இருந்தால்.. கொசுக்கடியையும் சந்தோஷமாக வரவேற்கலாம்!

BabyPriya@urs_priya 2h 

கறுப்பு வெள்ளை புகைப்பட காலத்தில் எல்லாம் போஸ் கொடுப்பது என்றால் விறைப்பாக நிற்பது என்ற பொருள் போலும்:-)))

நாயோன்@writernaayon 13m 

திருடித் தின்னும் அளவுக்கு வெண்ணை ஒன்றும் அவ்வளவு சுவையில்லையே. கண்ணனுக்கு என்ன ரசனையோ!



Will Smith @imWilISmith 13h

Stop being afraid of what could go wrong. And start being positive about what could go right.

குழலி @guzhali_ Protected Tweets 12h

நட்பின் பிறந்தநாளுக்கு வாழ்த்த மறந்தது நினைவு வரும்போது,வாங்கவிருக்கும் வசவுகளைவிட,எப்படிச் சமாதானப்படுத்துவதென்ற எண்ணமே அலைக்கழிக்கிறது.

Will Smith@imWilISmith 16h 

The longer the explanation, the bigger the lie.

ஆல்தோட்டபூபதி@thoatta 3h 

பல பேரு, தங்களை புத்திசாலின்னு நிரூபிக்கிறது கஷ்டம் என்பதால, அடுத்தவன முட்டாள்னு நிரூபிக்க ஃபுல் ஸ்பீடுல இறங்கிடுறாங்க :-)

Will Smith@imWilISmith 1h 

In everything we do, our own thoughts can help us succeed, or they can help us fail. Maintain a positive attitude.

குழலி :)@guzhali_ 13h 

அடுத்தவர்களுக்காக என் குணங்களை மாற்றிக்கொள்ளும் ஒவ்வொருமுறையும் தற்கொலை செய்து கொள்கிறேன் #தற்கொலை ட்விட்:)     

சனி, 25 ஜனவரி, 2014

செவ்வாழைப் பழத்தின் சிறப்புகள்...








திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.


வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.


பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.


கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.


பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.





நன்றி:-ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்


Click here to see mansur's page on facebook

வெள்ளி, 24 ஜனவரி, 2014

சாலை வழி உணவகம்


இதை யார் கேட்பது.....? அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது. சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன். அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன். சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர். சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்.“இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்… அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே… உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே. ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள். தகவல்: தமிழ்வளம்.காம் முடிந்த வரை SHARE செய்யுங்கள்..... அரசு இதை கவனிக்கட்டும்...
 
 

திங்கள், 20 ஜனவரி, 2014

பாம்படம்



இந்த கிண்ணங்களில்
அரிசிதான் இல்லையே
மழை நீரையாவது
நிரப்பி வையேன்.
                              -- தமிழச்சி  தங்கபாண்டியன்
பாம்படம் (ப.எண்:25)  புத்தகத்திலிருந்து...

சனி, 18 ஜனவரி, 2014

மணல் யுகம்

முதல் மணல் யுகத்தில், மணலை மனிதன் உருக்கி, கண்ணாடி செய்து, லென்ஸ் செய்து, டெலஸ்கோப் கண்டுபிடித்தபோது, வானில் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பார்க்க ஆரம்பித்தான். அதிலிருந்து நவீன காஸ்மாலஜி துவங்கியது.

இரண்டாவது மணல் யுகம், அதே லென்ஸ்களைத் திருப்பிப் போட்டு மைக்ராஸ்கோப் செய்தபோது, நுட்பமான ஜந்துக்களையும், பாக்டீரியா போன்ற உயிர்களையும் கவனித்தான். அதிலிருந்து மாலிக்யூலர் பயாலஜிக்கு வித்திட்டு, உயிரின் ரகசியம் வரை வந்துவிட்டான்.

மூன்றாவது மணல் யுகம், சிலிக்கன் சில்லு. அதை வைத்துக்கொண்டு கம்ப்யூட்டர் செய்து, மன வேகத்தை விரிவுபடுத்திக் கொண்டான்.

நான்காவது மணல் யுகம், ஃபைபர் ஆப்டிக் கண்ணாடி நூலிழைகளின் மூலம் இன்டர்நெட் செய்தித் தகவல் வெள்ளம், அதனால் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள்!"

"அற்புதமான கருத்து!" என்றேன்.

நவகாளமேகன் ஒரு வெள்ளைத் தாள் கேட்டார். "சீக்கிரம், சீக்கிரம்!" என்றார். பேனாவைத் திறந்தார். ஒரு உதறு உதறினார்.

'மண்ணில் பிறந்தபின் மண்ணுக்குச் செல்லுமுன்
கண்ணாடி கண்டு பிடித்திட்டோம் - விண்ணில்
தடவித் துளாவியும் தேடியும் பார்த்தும்
கடவுள் அகப்படவில் லை’

"தளை சரியா? இல்லைன்னா, திருத்திக்கும்! உமக்குத்தான் அரைகுறையா தெரியுமே!" என்று காகிதத்தை என்பால் ஃபேக்கிவிட்டு, சி.பி.ஆர்ட் சென்ட்டரில் ஒரு செராமிக் எக்ஸிபிஷனுக்குப் புறப்பட்டார்.

திங்கள், 6 ஜனவரி, 2014

கொடி போல இடை தளிர்போல நடை

 

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

முன்வாருங்கள் உங்கள் முயற்சியால் தேசம் வலுப்படும்




பல கேள்விகளுக்கு நெஞ்சம் திறந்த சகாயம் அவர்களின் வரிகள் இதோ...

"என்னைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. அந்த செய்தியில் நானும் (கெஜ்ரிவால் போல) ஒரு அரசியல் இயக்கம் தொடங்குவேனா? என்று கேட்டு எழுதியிருந்தது.

நிச்சயமாக இல்லை காரணம் நான் விரும்புவது வெறும் அரசியல் மாற்றம் அல்ல, லஞ்சமும், நேர்மையும் அற்ற, முழு சமுதாயமும் நேர்மையாக மாறக்கூடிய மனமாற்றமே.

லஞ்சத்தையும், ஊழலையும் கூட ஒழித்து விடலாம் ஆனால் மதுவை ஒழிக்கமுடியுமா என்பதுதான் எனது இன்றைய சந்தேகம். காரணம் நான் மதுரையில் ஆட்சித்தலைவராக இருந்த போது நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு ஒரு போன் வந்தது போன் செய்தவர் "ஐயா கலெக்டரா' என்று கேட்டு உறுதி செய்து கொண்டார். ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் எதிர்முனையின் குரலை எதிர்பார்த்தபோது " உசிலம்பட்டி பஸ் நிலையம் பக்கத்துல இருக்கிற டாஸ்மாக் கடையில் விற்கப்படும் ரம்மில் முன்பு போல கிக்கே இல்லை, ஏதோ தப்பு நடக்கிறது நடவடிக்கை எடுங்கள்' என்றார்.

பகலில் கூட குடிநீர் பிரச்னையை சொல்ல முன்வராத என் தமிழ் சமூகம் "குடிப்பதில்' ஒரு பிரச்னை என்றதும் நள்ளிரவு என்று கூட பாராது பேசுகிறதே என வேதனைப்பட்டேன்.

இதே போல தனியார் வசம் மதுக்கடைகள் இருந்த காலத்தில் நான் கோவையில் பணியாற்றினேன். அப்போது குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியாத கடைக்காரரிடம் விசாரணை செய்த போது அடுத்த மாதம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் விற்றுவிடுவோம் என்றார் எப்படி என்று கேட்டபோது அடுத்த மாதம் இந்த பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியை திறந்து விடுவார்கள் பிறகு விற்பனை சூடு பிடித்துவிடும் என்றார். அவர் இதை சாதாரணமாகவே சொன்னார், ஆனால் நான் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள என் தேசத்தின் எதிர்கால லட்சியத்தை அல்லவா அவர் அசைத்து பார்த்து விட்டார், கனத்த இதயத்தோடு அங்கு இருந்து அகன்றேன்.

ஜெயங்கொண்டம் என்ற ஊரில் சிவக்கொழுந்து என்று ஒரு 90 வயது நெசவாளர் இருக்கிறார். ஒரு நாளைக்கு 19 ஆயிரம் முறை அவரது அங்கங்களை அசைத்து, அசைத்து நாள் முழுவதும் வேலை செய்து ஒரு சேலை நெய்தால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் 75 ரூபாய்தான். நெசவாளர்கள் முன்னேற்றத்திற்காக உள்ள அலுவலகத்தின் கடைநிலை ஊழியரின் ஊதியம் கூட 500 ரூபாயாகும். இந்த ஊதியம் ஆளாளுக்கு மாறுபட்டு 3000 வரை உள்ளது. யாருக்காக இந்த துறை இயங்குகிறதோ அவருக்கு ஊதியம் வெறும் 75 ரூபாய் ஆனால் அவரை வைத்து பிழைக்கும் அலுவலர்களுக்கு, அதிகாரிகளுக்கு மூவாயிரம் ரூபாய் வரை நாள்தோறும் சம்பளம் என்றால் இதைவிட சமூக அவலம், சமூக மோசடி வேறு ஏதாவது இருக்க முடியுமா, வெட்கித் தலை குனிந்தேன்.

இந்த நாட்டில் உள்ள ஏழைமக்களின் கடைசி நம்பிக்கை என்பதாலும், என் இனிய தமிழை வளர்க்கும் ஒரு காரணியாக விளங்குவதாலும் அரசு பள்ளிகள் என்றால் எனக்கு அதிகம் பிரியம் அடிக்கடி அங்கு சென்று படிக்கும் குழந்தைகளிடம் பேசுவேன் காரணம் பெரியவர்களைப் போல அவர்களிடம் பொய் இருக்காது, பொறாமை இருக்காது, சூழ்ச்சி புரியாது.அந்த குழந்தைகளில் ஒன்று பேசும்போது நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றது உனக்கு எதற்கம்மா நிறைய பணம் என்றபோது அரிசி சோறு சாப்பிட ஆசையாக இருக்கிறது ஆகவே அதற்கு நிறைய சம்பாதிக்க விரும்புகிறேன் என்றது, அப்படியே ஆடிப்போய்விட்டேன். சுதந்திரத்தின் பலனை யார்தான் அனுபவிக்கிறார்கள் என்ற கேள்வி என்முன் பூதாகரமாக எழுந்து நின்றது.

சென்னைக்கு அருகில் உள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்சி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகள் பருக அருகதையற்ற பானத்தை தயாரித்தது என்பது தெரிந்ததும் எட்டு பூட்டுகளை போட்டு அந்த நிறுவனத்தை பூட்டினேன், இவ்வளவு துணிச்சல் எங்கு இருந்து வந்தது என்று கேட்டவர்கள் பலர், என் பதில் நேர்மையாய் இருந்து பாருங்கள் இதைவிட அதிக துணிச்சல் வரும் என்பதாகவே இருந்தது.

லஞ்சம் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றான காவல்துறையின் கதை இது. லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு கிராமத்தில் கள்ள சாராயம் விற்பதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தனர். நான் கள ஆய்வு செய்து எனக்கு கீழ் உள்ளவர்களை கண்டித்தேன் அவர்களுக்கும் லஞ்சத்தில் பங்கு உண்டு போலும் காவல்துறைக்கு துணை போக என் மீது எப்ஐஆர் போட்டனர். தப்பை தட்டிக் கேட்பதே தப்பா என்று நினைத்த நான் இதைக்கண்டு பயப்படவில்லை நானும் சட்டம் படித்தவன் என்ற முறையில் துணை கண்காணிப்பாளர் வரை ஒரு சம்மன் அனுப்பினேன் மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் தெரியாமல் நடந்துவிட்டது மன்னியுங்கள் என்றனர், மன்னிக்கவேண்டியது நான் அல்ல உங்களால் பாழ்பட்டு கிடக்கும் கிராமமக்கள் என்றேன்.

ஒரு அதிகாரி நினைத்தால் மனசாட்சிப்படி நடந்தால் அவரால் எவ்வளவோ இந்த தேசத்திற்கு இந்த மக்களுக்கு நல்லது செய்யமுடியும் ஒரு ஊனமுற்ற இளைஞர் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு கொடுத்தார். மனு கொடுத்த அன்று மாலையே அவருக்கு அவர் கேட்ட மூன்று சக்கர சைக்கிளை பெறச்செய்தேன் இது என்னால் மட்டும் முடிந்தது என்று சொல்ல வரவில்லை முயன்றால் எல்லேராலும் முடியும் என்றே சொல்ல வருகிறேன்.
ஊழலின் மொத்த உருவமாக இருந்த என் கீழ் உள்ள அதிகாரியை அசைத்து கூட பார்க்க முடியாது என்று என்னை அச்சுறுத்தினார்கள் காரணம் லஞ்சம் கொடுத்து, கொடுத்து சகலரையும் கெடுத்து வைத்திருந்தார். அவரை அசைத்து மட்டுமல்ல செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனையும் பெறவைத்தேன்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் தப்பு செய்தவர்களின் பெயர், ஊர், காலம் என அனைத்தையும் என்னால் சொல்லமுடியும் ஆனால் இப்போது நான் சொல்லமுடியாது பிறகு ஒரு காலம் வரும்போது சொல்கிறேன் சொல்வதென்ன புத்தகமாகவே போடுகிறேன்.எனது நேர்மைக்கு பரிசாக இதுவரை 22 முறை இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளேன் என்றார்கள் அதனால் என்ன நான் போகும் ஒவ்வொரு இடத்திலும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துபவர்களின் எண்ணிக்கை என்னோடு சேர்ந்து கூடிக்கொண்டே போகிறதே அதை நினைத்து சந்தோஷம்தான்.

ஒன்று மட்டும் நிச்சயம் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் எதிராக என்னைப் போல உள்ளிருந்து போராடுவதை விட உங்களைப்போல வெளியே இருந்து போராடுவது எளிது ஆகவே மகாகவி பாரதி சொன்னபடி துணிச்சலை சூடி எதிரிகளை பந்தாட உன் எதிரே இருக்கும் லஞ்சத்தை, ஊழலை ஒளித்திட முன்வாருங்கள் உங்கள் முயற்சியால் தேசம் வலுப்படும்.

‘டி.எம்.எஸ்.-ங் கிறதுக்கு விளக்கம் என்ன?’’

மெரீனாவில் மாலை நடந்து செல்லும்போது, சென்னையின் பல பெரிய மனிதர்கள் எதிரில் செல் வார்கள். பீட்டர் அல்போன்ஸ், ஏவி.எம்.குமரன், ஆர்.எம். வீரப்பன்... இப்படிப் பலர் கடக்கும்போது, ஒரு புன்னகையோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. விளம்பரம் போல ஒரு 'ஹம் ஹை நா' கையசைப்போ பரிமாறிக் கொள்வோம்.

போன வாரம் டி.எம்.எஸ்., சந்தன கலர் சபாரி சூட்டுடன், சென்ட் வாசனையுடன் பக்கத் தில் வந்து உட்கார்ந்தபோது, பேச வேண்டும் என்று தோன்றியதன் காரணம் - இளம் வயதில் அவரு டைய பல பாடல்கள் என்னைக் கவர்ந்திருக் கின்றன.

இப்போதுகூட 'அவளுக்கென்ன'வோ, 'வந்த நாள் முத'லோ, 'அதோ அந்தப் பறவை போல'வோ, ‘அந்த நாள் ஞாபக’மோ, ‘நான் ஆணையிட்டா’லோ டி.வி-யில் வரும்போது, விரல் சேனல் தாவத் தயங்குகிறது.

"எத்தனை பாட்டு பாடியிருப்பீங்க? எல்லாப் பாட்டும் நினைவிருக்கா?"

"கிருஷ்ண விஜயம் படத்தில் நரசிம்ம பாரதிக் குப் பாடினதுதான் முதல் பாட்டு. அதிலிருந்து நான் பாடின பாட்டெல் லாம் நோட்புக்கில் வரிசையா பாடின தேதி, அதற்குப் பெற்ற தொகை எல்லாத்தையும் எழுதி வெச்சிருக் கேன். ஆயிரக் கணக்கில் இருக்கும்!’’

‘‘டி.எம்.எஸ்.-ங் கிறதுக்கு விளக்கம் என்ன?’’

‘‘மூணு விளக்கம் இருக்கு. 'டி'ங்கறது எங்க சௌராஷ்டிர கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கும் பத்திய உணவு சார்ந்த ஊர்ப் பெயர் - தொகுளுவா (Thoguluva), 'எம்'ங்கறது மீனாட்சி ஐயங்கார்(!), ‘எஸ்’ - சௌந்தர்ராஜன்.

இன்னொரு விளக்கம் - தியாகையர், முத்துசுவாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் இந்த மும்மூர்த்திகளு டைய இனிஷியலும் எனக்குக் கிடைச்சது ஒரு பாக்கியம்.

மூணாவது - ட்ரான்ஸென்ட்டல் மெடிட்டேஷன் சர்வீஸ், என் பாட்டுகள் மூலம் கொடுக்கறது!

'பாடும் குயிலின் இசைப் பயணம்'னு என் வாழ்க்கையை நானூறு பக்கம் புத்தகமா போட்டிருக்காங்க, மணிவாசகர் பதிப்பகத்துல! படிச்சுப் பாருங்க!"

‘‘உடல்நிலை எப்படி இருக்கு?’’

"டயபடீஸ் தொல்லை கொடுக்குது. கால் வீங்கிக்குது. இப்பக் கொஞ்சம் காது கேட்கலை. அதனால, மத்த பேரோடு பேசும் போது இரைச்சலா பேச வேண்டியிருக்குனு ஹியரிங் எய்டு வெச்சிருக்கேன். நிறையப் பாடிட்டேன். இப்ப மௌனம்தான் எனக்கு முக்கியமா இருக்குது!" என்றவர், சின்ன மூன்றறைப் பெட்டியைக் காட்டி, "பாருங்க... தனித்தனியா காலை, மத்தியானம், இரவுனு ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மாத்திரை சாப்பிடறேன்!" என்றார்.

"நானும்தான்!" என்றேன்.

"பெரிய பெரிய நடிகர்களெல்லாம் என் குரலைப் பயன்படுத்தி, சினிமாவிலேயும் அரசியல்லேயும் உச்சத்துக்கு உயர்ந்தாங்க!’’

‘‘அவங்க உங்களுக்கு நன்றி சொன்னாங்களா?"

உதட்டைப் பிதுக்கி, "ம்ஹ§ம்..! ஆனா, அவங்க எல்லாம் இறந்து போயிட்டாங்க. குரல் மட்டும் உசுரோட இருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்க பாராட்டு போதும்! இப்பக்கூட சிங்கப்பூர்ல ஒரு பாராட்டு விழாவுக்கு அழைச்சிருக்காங்க. ஏப்ரல்ல போறேன்!"

"டயபடீஸைப் பார்த்துக்குங்க. இருநூறுக்கு மேல போஸ்ட்பிரண்டியலைத் தாவ விடாதீங்க. தினம் நடங்க. பாட்டை விட்டுராதீங்க!" என்றேன்.

"வரேங்க..." என்று கற்பகவல்லியின் ஆனந்த பைரவியைக் கோடி காட்டிவிட்டு, எழுந்து சென்றார் டி.எம்.எஸ்.


Thanks to Sujatha fans club