ஞாயிறு, 12 மே, 2013

கனவில் நீ - காடெல்லாம் குறிஞ்சிப்பூ

5-May-13

குழலி :) @guzhali_ 1h 

ரகசியமென தயங்கித் தயங்கி கூறும் விஷயத்தை சிறு சிரிப்பினால் அலட்சியப்படுத்தி ஒன்றுமில்லாத விஷயமாக்கிவிடுகின்றனர் சிலர்.

நாயோன்@writernaayon 3 May 

மகள் நட்சத்திரங்களை எண்ணுகிறாள். எண்ண முடியாது என்பது வேறுவிஷயம், என் கவலை அவளுக்கு 100க்குமேல் தெரியாது என்பதுதான்!

The Princess@rajakumaari 23h 

எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் உடையையும் உடலையும் தாண்டி வரும் விமர்சனங்கள் குறைவு பெண்களுக்கு

வெ.பெத்துசாமி@Pethusamy 18h 

குழந்தைகளுடன் விளையாடும்போது தற்காலிகமாய் கிடைக்கிறது, கடந்துபோன பால்யம்

எழிலினி@Ezhilini 4 May 

வெயிலைப்போல் ரசிக்க வேண்டும், வீதியில் போகும் விதவிதமான மனுஷாளை.

பிரம்மன்
5/6/2013
பிரம்மன்@altappu 3h 

தோசை ஒரு palindrome .ஏன்னா தோசையை திருப்பி போட்டாலும் தோசைதான் வரும். இட்லி வராது. கரெக்டா? # அதிகாலை சிந்தனைகள்

எழிலினி@Ezhilini 5h 

என்னை நானே விரும்புவதால் யாரையும் வெறுக்க வேண்டிய தேவை இல்லை.
வெ.பெத்துசாமி

வெ.பெத்துசாமி@Pethusamy 5h 

கெட்டுப் போகாத இராகம் எது? 'சுத்த' தன்யாசி. #நாங்களும் ப்ளேடு போடுவோமில்ல :-D

வெ.பெத்துசாமி@Pethusamy 8h 

எத்தனை நாள் "Dust bin" ல் கிடந்தாலும் அழுகிப்போவதில்லை #கம்ப்யூட்டர் பைல்கள்
குழலி :)

குழலி :) @guzhali_ 21h 

ஆண்களை அழகாக்கி ,மாயம் செய்கிறது வேஷ்டி சட்டை

காக்கைச் சித்தர்@vandavaalam 22h 

"எக்ஸ்க்யூஸ் மீ" என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பலப் பெண்களால் சொல்லப்படுகிறது

குழலி :) @guzhali_ 22h 

கிராமத்து திருவிழாக்களில் தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது கும்மி.

மிருதுளா @mrithulaM 23h 

நமக்கு தேவைப்படாத சமயங்களில் செலுத்தப்படும் அன்பு தொல்லையாகிப் போகிறது.
5/9/2013
கார்த்தி@get2karthik 11h 

குழந்தை முன் மயக்கமுற்றதுபோல் நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம்.

RT @umakrishh ட்ரீட்.நமக்கு யாராச்சும் தரேன்னு சொன்னா தேன் வந்து பாயற மாதிரியும் நம்மகிட்ட கேட்டா ஈயத்தை காய்ச்சி ஊத்தற மாதிரியும் இருக்கு

வெ.பெத்துசாமி@Pethusamy 19h 

கோயில்களில் சிறப்புக் கட்டண வழிபாடு குறித்து கிண்டல் செய்பவர்கள், தட்கால் டிக்கட் புக்கிங் குறித்து கிண்டல் செய்வதில்லை

Prathipa@Talkativewriter 21h 

தான் செய்த தவறை அழகாய் மறைக்க தெரிந்தவர் ஒழுக்கமானவர் எனப்படுகிறார்!
5/11/2013
எழிலினி@Ezhilini 3h 

கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாய் வாழ முயற்சிக்கும் போதெல்லாம், இழந்த பொருளின்மேல் ஏக்கம் தடையாய் வருகிறது

Prathipa@Talkativewriter 9 May 

Heart and mind could be husband and wife- Never agree with each other! Idiots!

Prathipa@Talkativewriter 9 May 

If a woman is brilliant in a relationship, break up is highly not impossible!

ஆல்தோட்டபூபதி@thoatta 10 May 

அண்ணாச்சி, பஸ் டிரைவருங்கள ஹெல்மெட் போட சொன்னது வாஸ்தவந்தான், அதுக்காக வாக்கிங் போறப்பவுமா போட்டுக்கிட்டு வருவீங்க?

arasu@love_1691 8 Jan 12 

கனவில் நீ - காடெல்லாம் குறிஞ்சிப்பூ

arasu@love_1691 25 Jun 

மைய்யடர் கானகமுன் கண்கள்.. கானகந்தேடும் சிறு பறவை என் உயிர் .

Sri@Sricalifornia 10 May 

பழைய புத்தகம். நடு நடுவே அப்பாவின் குறிப்புகள்.புரட்டும் வேளையில் அனிச்சையாக கண்களில் ஈரம். என் சீதனம்

ஆல்தோட்டபூபதி@thoatta 10 May 

ஈமு கோழி விளம்பர சீசன் போய்,தீபாவளி ஜவுளிகள் விளம்பர சீசன் போய், ஏசி ஃப்ரிட்ஜ் விளம்பர சீசன் போய் இப்ப பள்ளிக்கூட விளம்பர சீசன்.

வெ.பெத்துசாமி@Pethusamy 9 May 

என் கவிதையைப் படித்துப் பார்த்த நண்பன் ஒன்றுமே புரியவில்லை என்றான். ஏதாவது ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு அதை அனுப்பி வைக்க வேண்டும்

ஆல்தோட்டபூபதி@thoatta 9 May 

பல பெற்றோர்களுக்கு, பிள்ளைகளின் படிப்புக்கு செலவு செய்யும் பணம் என்பது INVESTMENT.!!

TJ of VJawards 2013@get2karthik 8 May 

குழந்தை முன் மயக்கமுற்றதுபோல் நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம்.

சனி, 4 மே, 2013

அவனது விழிகள்



குழலி :) @guzhali_ 2h 

அவனது விழிகள் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்திலும் என்றுமே அழகிதான் நான்! ;)
குழலி :)

குழலி :) @guzhali_ 5h 

நிழலை இழந்த கிளைகளற்ற மரம் போலாகிறது மனம்; சிலரை இழந்த பின்பு. .

குழலி :) @guzhali_ 14 Apr 

நன்கு பழக்கப்பட்ட இடத்திலும்கூட அந்நியமாக உணர்கிறோம் சிலநேரங்களில். .
கூத்தாடி

கூத்தாடி@Koothaadi 7h 

பழம் தின்று விதை இடும் பறவை போல சுய நலத்தின் எச்சமாகவேனும் கொஞ்சம் பொது நலம் பேணுங்கள்

குழலி :) @guzhali_ 19 Apr 

சில உருவங்கள் விழித்திரைக்குள் ஊடுருவும்போதெல்லாம் முகத்தில் படருகிறது துயரத்தின் சாயல். .

வசந்தன். @vasanthen 18 Apr 

ஒரு பியர் என் தனிமையை அருந்திக்கொண்டிருக்கிறது.

குழலி :) @guzhali_ 18 Apr 

உன்னிடம் மட்டும் நான் வெளிப்படுத்தும் பைத்தியக்காரத்தனங்களைக்கொண்டு,பைத்தியமென்று கணித்துவிடாதே என்னை! #பைத்தியக்கவித

குழலி :) @guzhali_ 18 Apr 

'நான் கோபமாக இருக்கிறேன்' எனக் கூறிய பிறகு, அடுத்தவர்கள் தெரிந்து கொள்வதுதான் என் கோபத்தின் சிறப்பு.

21-Apr-13
குழலி :) @guzhali_ 15h 

என் கன்னத்தின்மேல் வீழ்ந்து சிதறி உருவிழந்த ஒற்றை முதல் மழைத்துளியைத் தேடிக் கொண்டிருக்கையிலேயே எனை நனைத்தது அப்பெரும் மழை:)

வசந்தன்.
வசந்தன். @vasanthen 15h 

கேள்விகளோடு பிறந்தவள் நீ. பதில்களோடு தொலைந்தவன் நான்.

வசந்தன். @vasanthen 15h 

யாருமற்ற வனாந்திரத்தில் தனியாய் அலைந்து கொண்டிருக்கிறது ஒரு தனிமை.

சி.சரவணகார்த்திகேயன்@writercsk 19h 

சோறூட்டும் பெண்கள் ஒரு சிட்டிகை அன்பையும் சேர்த்தே ஊட்டுகிறார்கள்.

22-Apr-13
Velayudhan Done
வாங்க சாப்பிடுங்கன்னு மரியாதையா கூப்பிட்டு பந்தியில் அமர வைக்கும் கலாசாரம் மறைந்து.......
போங்க எடுத்துக்குங்க’ன்னு ஒருமாதிரியா சொல்லற.............”பவேட் ” கலாசாரம் பெருகி விட்டது.!!!

Unlike · · Share · 4 hours ago near Ahmedabad, Gujarat · 

23-Apr-13
Raajaachandrasekar@raajaacs 10h 

இரண்டு புள்ளிகளுக்கு இடையில் இருக்கும் தூரத்தை இடைவெளியாகப் பார்ப்பவர்கள் எளிதில் கடந்து விடுகிறார்கள்.

குழலி :) @guzhali_ 10h 

என் பிடிவாதங்களுக்கு அளவில்லா அங்கீகாரம் தருவதால்தான், உன்னிடம் மட்டும் பிடிவாதக்காரியாகிவிட்டேன். .