வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வறுமை


கடை வீதிகளில் பயணிக்கையில்
சாலை ஓர கடைகளில்
ஆடைகள் விற்கும்
விடலைகளையும்

சாலை நிருத்தகளில்
தன மழலையால்
கைவிடப்பட்ட
மூதாட்டியின்
வயிற்று கெஞ்சலும்

இரக்கமில்லா இறைவனால்
உறுப்புகளை இழந்து
மாற்று திறன் தேடவும்
பட்டினி பிணி தீர்க்கவும்
மனிதம் மறந்த
மாந்தர்க்கு நடுவே
கையேந்தும்
சில உயிரினங்களும்

இன்றைக்கு குடிக்க
ஒரு கடி கிடைதாள்
போதுமென்று நிறுத்தங்களில்
கனத்த தனது குரலில்
உரத்து இசைக்கும்
மறைத்த முதல்வரின்
பாடல் வரிகளை
பெருமிதம் மற்றும்
சற்று தருக்குடன் இசைக்கும்
பெரிசுகளை
பார்க்கும் பொழுது
இவர்களுக்கும்
வாழ்வுண்டு என தோன்றும்
ஆனால் மாற்றம் எப்போது......

கருத்துகள் இல்லை: