இந்த வார்த்தை தான் ஒபாமாவுக்கும் இன்றைய இளையதலைமுறைக்கும் பிடித்த ஒரு வார்த்தை,இன்றைய நிலையில் அரசியலில் இளையதலைமுறையின் உழைப்பால் தான் நாம் நினைத்த மாற்றம் கிட்டும் என்பது மறுக்க முடியாத கருத்தாகவே உள்ளது.
அதனால் தானோ என்னவோப் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு இளையதலைமுறையை கவர என்னுகின்றன. ஆனால் இந்த தலைமுறையினரை கவரகூடிய தலைவர்கள் இல்லை என்பது தான் நிதர்சனம் ..
திரு.அண்ணா மற்றும் திரு.கருணாநிதியால் கவர பட்ட முந்தய தலைமுறையினர் திராவிட இயக்கத்தின் வேராகவும் துன்கலாகவும்
இருந்தனர் இப்போதும் இருக்கின்றனர், ஆனால் இன்று திரு. கருணாநிதியால் கூட இந்த தலைமுறையை கவர முடியவில்லை.
காரணம் இன்றைய தலைவர்களின் சுயநலபோக்கு.
என் மக்கள் என்பதை தன குடும்பம் மட்டுமே என்று என்னும் போக்கு..
தந்தை ஒரு துறையில் இருந்து வெற்றி பெற்றால் அதனை பின்பற்றி புதல்வர்களும் வருதல் என்பது வரவேற்க்கதக்கது என்றாலும்,சமூக பணி யென்பது சொத்துக்களை குவிக்கும் தொழில்லை என்பதைஉணரவேண்டும் முதலில்.பொதுவுடைமை கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட இன்றைக்கு கோடிகணக்கில் சொத்துக்கள் உள்ளன.முழுக்க மக்களுக்கு பணியாற்றும் அவர்களுடன் சேர்த்தே இருக்கும் தலைவர்கள் இன்றைக்கு இல்லை என்பது
உண்மை.
திரைபடங்களில் பார்க்கும் கதாநாயகர்கள் கூட வாழ்க்கையில் அப்படி நடந்துகொள்வார்களா என்பது கேள்வி குறியே..
சரிஆன்மிகம் மூலமாக பின்பற்றலாம் என்றால் அவர்களின் சொத்து கணக்கை விட சர்ச்சை கணக்கு தான் அதிகமாக உள்ளது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு இப்போ நமக்கு பின்பற்ற ஒரு கொள்கையோ அல்லது தலைவனோ தேவையா என்ன?என்று அப்படியே விட்டு தொழைகாட்சி ,முன் உட்காந்து கொள்கிர்ழ்து இந்த தாளை முறை..
ஒரு கோடி யாருக்கு பாக்கலாம் என்று..
,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக