|
குழலி :) @guzhali_ 2h |
|
அவனது விழிகள்
எடுக்கும் புகைப்படங்கள் அனைத்திலும் என்றுமே அழகிதான் நான்! ;) |
|
குழலி :) @guzhali_ 5h |
|
நிழலை இழந்த
கிளைகளற்ற மரம் போலாகிறது மனம்; சிலரை இழந்த பின்பு. . |
|
குழலி :) @guzhali_ 14 Apr |
|
நன்கு பழக்கப்பட்ட
இடத்திலும்கூட அந்நியமாக உணர்கிறோம் சிலநேரங்களில். . |
|
கூத்தாடி @Koothaadi 7h |
|
பழம் தின்று விதை
இடும் பறவை போல சுய நலத்தின் எச்சமாகவேனும் கொஞ்சம் பொது நலம் பேணுங்கள் |
|
குழலி :) @guzhali_ 19 Apr |
|
சில உருவங்கள்
விழித்திரைக்குள் ஊடுருவும்போதெல்லாம் முகத்தில் படருகிறது துயரத்தின் சாயல். . |
|
வசந்தன். @vasanthen 18 Apr |
|
ஒரு பியர் என்
தனிமையை அருந்திக்கொண்டிருக்கிறது. |
|
குழலி :) @guzhali_ 18 Apr |
|
உன்னிடம் மட்டும்
நான் வெளிப்படுத்தும் பைத்தியக்காரத்தனங்களைக்கொண்டு,பைத்தியமென்று
கணித்துவிடாதே என்னை! #பைத்தியக்கவித |
|
குழலி :) @guzhali_ 18 Apr |
|
'நான் கோபமாக
இருக்கிறேன்' எனக் கூறிய பிறகு, அடுத்தவர்கள் தெரிந்து கொள்வதுதான் என்
கோபத்தின் சிறப்பு. |
|
21-Apr-13 |
குழலி :) @guzhali_ 15h |
|
என் கன்னத்தின்மேல்
வீழ்ந்து சிதறி உருவிழந்த ஒற்றை முதல் மழைத்துளியைத் தேடிக் கொண்டிருக்கையிலேயே
எனை நனைத்தது அப்பெரும் மழை:) |
|
|
|
கேள்விகளோடு பிறந்தவள் நீ.
பதில்களோடு தொலைந்தவன் நான். |
|
வசந்தன். @vasanthen 15h |
|
யாருமற்ற வனாந்திரத்தில்
தனியாய் அலைந்து கொண்டிருக்கிறது ஒரு தனிமை. |
|
சி.சரவணகார்த்திகேயன் @writercsk 19h |
|
சோறூட்டும் பெண்கள் ஒரு
சிட்டிகை அன்பையும் சேர்த்தே ஊட்டுகிறார்கள். |
|
22-Apr-13 |
Velayudhan Done |
வாங்க
சாப்பிடுங்கன்னு மரியாதையா கூப்பிட்டு பந்தியில் அமர வைக்கும் கலாசாரம்
மறைந்து....... |
போங்க
எடுத்துக்குங்க’ன்னு ஒருமாதிரியா சொல்லற.............”பவேட் ” கலாசாரம் பெருகி
விட்டது.!!! |
|
Unlike · · Share · 4 hours ago
near Ahmedabad, Gujarat · |
|
23-Apr-13 |
Raajaachandrasekar @raajaacs 10h |
|
இரண்டு புள்ளிகளுக்கு இடையில்
இருக்கும் தூரத்தை இடைவெளியாகப் பார்ப்பவர்கள் எளிதில் கடந்து விடுகிறார்கள். |
|
குழலி :) @guzhali_ 10h |
|
என் பிடிவாதங்களுக்கு அளவில்லா
அங்கீகாரம் தருவதால்தான், உன்னிடம் மட்டும் பிடிவாதக்காரியாகிவிட்டேன். . |
|
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக