சனி, 8 பிப்ரவரி, 2014

இப்படித்தான்-வந்தது-மேற்கத்தியக்-கட்டிடக்கலை

 Return to frontpage

ஒரு வீட்டைத் தாங்கி நிற்பது கட்டுமானப் பொருட்கள் என நாம் நினைத்தால் தவறு. வலிமையான அஸ்திவாரம்தான் ஒரு கட்டிடத்தைத் தாங்கி நிற்கிறது. இந்த அஸ்திவாரத்தில் மண்ணின் தன்மையும் அடங்கியிருக்கிறது. மண்ணின் தன்மைக்கு ஏற்பதான கட்டிடங்களை எழுப்ப முடியும். இந்தியாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் மண்ணின் இயல்புக்கேற்பவே அஸ்திவாரம் பற்றிய கணக்குகள் உள்ளன.

நான்கு முதல் 6 அங்குல விட்டமுள்ள சின்னச் சின்னக் கழிகளைக் கொண்டு ஒரு அடி இடைவெளியில் நட்டு அஸ்திவாரம் தோண
்டுவதே பாரம்பரியப் பழக்கம். அதில் மூங்கில் கழிகளைப் பூச்சி அரிக்காத விதத்தில் பாடம் செய்வார்கள். அவற்றின் மேல் பகுதியைத் துணியால் கட்டுவார்கள். ஏனெனில் நிலத்தில் சுத்தியால் அடித்துப் பதிக்கும்போது அந்தக் கழிகள் உடையாமல் இருக்க இந்த ஏற்பாடு.

மண் இளகி, இறுகப் பிடிக்கும் வரை கழிகளைச் சுத்தியால் அடிப்பார்கள். தற்போது போடப்படும் கான்கிரீட் அடித்தளம் கட்டும் முறைக்குச் சமமான நடைமுறையே இது. இந்தக் கழிகளுக்கு நடுவில் கற்கலவைகளையும், செங்கற்களையும் உள்ளூர் பொருட்களையும் போட்டு அடித்தளம் அமைப்பதே பாரம்பரிய முறை.

ஒரு கட்டிடம் எவ்வளவு பாரம் தாங்கும் என்பதை இப்படிக் கணக்குப் பார்த்துக் கட்டினார்கள் நம் மூதாதையர்கள். கட்டிடத்தின் சுமையை அஸ்திவாரம் எவ்வளவு தாங்கும் என்பதைக் கண்டறிவதில் பல சிரமங்கள் இருந்தாலும் கட்டிடக் கலை என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் இந்த முறையை நம் மூதாதையர்கள் பின்பற்றினர். ஆனால், நாம் கட்டும் கட்டிடங்களின் பாணி வெள்ளையர்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது


Courtesy to The Hindu Tamil

 Click Me to read full article

கருத்துகள் இல்லை: