முதல் மணல் யுகத்தில், மணலை மனிதன் உருக்கி, கண்ணாடி செய்து, லென்ஸ்
செய்து, டெலஸ்கோப் கண்டுபிடித்தபோது, வானில் கிரகங்களையும்
நட்சத்திரங்களையும் பார்க்க ஆரம்பித்தான். அதிலிருந்து நவீன காஸ்மாலஜி
துவங்கியது.
இரண்டாவது மணல் யுகம், அதே லென்ஸ்களைத் திருப்பிப் போட்டு மைக்ராஸ்கோப் செய்தபோது, நுட்பமான ஜந்துக்களையும், பாக்டீரியா போன்ற உயிர்களையும் கவனித்தான். அதிலிருந்து மாலிக்யூலர் பயாலஜிக்கு வித்திட்டு, உயிரின் ரகசியம் வரை வந்துவிட்டான்.
மூன்றாவது மணல் யுகம், சிலிக்கன் சில்லு. அதை வைத்துக்கொண்டு கம்ப்யூட்டர் செய்து, மன வேகத்தை விரிவுபடுத்திக் கொண்டான்.
நான்காவது மணல் யுகம், ஃபைபர் ஆப்டிக் கண்ணாடி நூலிழைகளின் மூலம் இன்டர்நெட் செய்தித் தகவல் வெள்ளம், அதனால் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள்!"
"அற்புதமான கருத்து!" என்றேன்.
நவகாளமேகன் ஒரு வெள்ளைத் தாள் கேட்டார். "சீக்கிரம், சீக்கிரம்!" என்றார். பேனாவைத் திறந்தார். ஒரு உதறு உதறினார்.
'மண்ணில் பிறந்தபின் மண்ணுக்குச் செல்லுமுன்
கண்ணாடி கண்டு பிடித்திட்டோம் - விண்ணில்
தடவித் துளாவியும் தேடியும் பார்த்தும்
கடவுள் அகப்படவில் லை’
"தளை சரியா? இல்லைன்னா, திருத்திக்கும்! உமக்குத்தான் அரைகுறையா தெரியுமே!" என்று காகிதத்தை என்பால் ஃபேக்கிவிட்டு, சி.பி.ஆர்ட் சென்ட்டரில் ஒரு செராமிக் எக்ஸிபிஷனுக்குப் புறப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக