| 5-May-13 | |
| குழலி :) |
|
| ரகசியமென தயங்கித் தயங்கி கூறும் விஷயத்தை சிறு சிரிப்பினால் அலட்சியப்படுத்தி ஒன்றுமில்லாத விஷயமாக்கிவிடுகின்றனர் சிலர். | |
| நாயோன் |
|
| மகள் நட்சத்திரங்களை எண்ணுகிறாள். எண்ண முடியாது என்பது வேறுவிஷயம், என் கவலை அவளுக்கு 100க்குமேல் தெரியாது என்பதுதான்! | |
| The Princess |
|
| எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் உடையையும் உடலையும் தாண்டி வரும் விமர்சனங்கள் குறைவு பெண்களுக்கு | |
| வெ.பெத்துசாமி |
|
| குழந்தைகளுடன் விளையாடும்போது தற்காலிகமாய் கிடைக்கிறது, கடந்துபோன பால்யம் | |
| எழிலினி |
|
| வெயிலைப்போல் ரசிக்க வேண்டும், வீதியில் போகும் விதவிதமான மனுஷாளை. | |
|
|
| பிரம்மன் |
|
| தோசை ஒரு palindrome .ஏன்னா தோசையை திருப்பி போட்டாலும் தோசைதான் வரும். இட்லி வராது. கரெக்டா? # அதிகாலை சிந்தனைகள் | |
| எழிலினி |
|
| என்னை நானே விரும்புவதால் யாரையும் வெறுக்க வேண்டிய தேவை இல்லை. | |
|
|
| வெ.பெத்துசாமி |
|
| கெட்டுப் போகாத இராகம் எது? 'சுத்த' தன்யாசி. #நாங்களும் ப்ளேடு போடுவோமில்ல :-D | |
| வெ.பெத்துசாமி |
|
| எத்தனை நாள் "Dust bin" ல் கிடந்தாலும் அழுகிப்போவதில்லை #கம்ப்யூட்டர் பைல்கள் | |
| குழலி :) |
|
| ஆண்களை அழகாக்கி ,மாயம் செய்கிறது வேஷ்டி சட்டை | |
| காக்கைச் சித்தர் |
|
| "எக்ஸ்க்யூஸ் மீ" என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பலப் பெண்களால் சொல்லப்படுகிறது | |
| குழலி :) |
|
| கிராமத்து திருவிழாக்களில் தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது கும்மி. | |
| மிருதுளா |
|
| நமக்கு தேவைப்படாத சமயங்களில் செலுத்தப்படும் அன்பு தொல்லையாகிப் போகிறது. | |
| 5/9/2013 | |
| கார்த்தி |
|
| குழந்தை முன் மயக்கமுற்றதுபோல் நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம். | |
| RT @umakrishh ட்ரீட்.நமக்கு யாராச்சும் தரேன்னு சொன்னா தேன் வந்து பாயற மாதிரியும் நம்மகிட்ட கேட்டா ஈயத்தை காய்ச்சி ஊத்தற மாதிரியும் இருக்கு | |
| வெ.பெத்துசாமி |
|
| கோயில்களில் சிறப்புக் கட்டண வழிபாடு குறித்து கிண்டல் செய்பவர்கள், தட்கால் டிக்கட் புக்கிங் குறித்து கிண்டல் செய்வதில்லை | |
| Prathipa |
|
| தான் செய்த தவறை அழகாய் மறைக்க தெரிந்தவர் ஒழுக்கமானவர் எனப்படுகிறார்! | |
| 5/11/2013 | |
| எழிலினி |
|
| கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாய் வாழ முயற்சிக்கும் போதெல்லாம், இழந்த பொருளின்மேல் ஏக்கம் தடையாய் வருகிறது | |
| Prathipa |
|
| Heart and mind could be husband and wife- Never agree with each other! Idiots! | |
| Prathipa |
|
| If a woman is brilliant in a relationship, break up is highly not impossible! | |
| ஆல்தோட்டபூபதி |
|
| அண்ணாச்சி, பஸ் டிரைவருங்கள ஹெல்மெட் போட சொன்னது வாஸ்தவந்தான், அதுக்காக வாக்கிங் போறப்பவுமா போட்டுக்கிட்டு வருவீங்க? | |
| arasu |
|
| கனவில் நீ - காடெல்லாம் குறிஞ்சிப்பூ | |
| arasu |
|
| மைய்யடர் கானகமுன் கண்கள்.. கானகந்தேடும் சிறு பறவை என் உயிர் . | |
| Sri |
|
| பழைய புத்தகம். நடு நடுவே அப்பாவின் குறிப்புகள்.புரட்டும் வேளையில் அனிச்சையாக கண்களில் ஈரம். என் சீதனம் | |
| ஆல்தோட்டபூபதி |
|
| ஈமு கோழி விளம்பர சீசன் போய்,தீபாவளி ஜவுளிகள் விளம்பர சீசன் போய், ஏசி ஃப்ரிட்ஜ் விளம்பர சீசன் போய் இப்ப பள்ளிக்கூட விளம்பர சீசன். | |
| வெ.பெத்துசாமி |
|
| என் கவிதையைப் படித்துப் பார்த்த நண்பன் ஒன்றுமே புரியவில்லை என்றான். ஏதாவது ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு அதை அனுப்பி வைக்க வேண்டும் | |
| ஆல்தோட்டபூபதி |
|
| பல பெற்றோர்களுக்கு, பிள்ளைகளின் படிப்புக்கு செலவு செய்யும் பணம் என்பது INVESTMENT.!! | |
| TJ of VJawards 2013 |
|
| குழந்தை முன் மயக்கமுற்றதுபோல் நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம். |
ஞாயிறு, 12 மே, 2013
கனவில் நீ - காடெல்லாம் குறிஞ்சிப்பூ
சனி, 4 மே, 2013
அவனது விழிகள்
திங்கள், 8 ஏப்ரல், 2013
ஜன்னல் அருகே
| கார்க்கி |
||||||
| தோழர் என்றால் புரட்சியாகவும், தோழி என்றால் ரொமான்ஸாகவும் அர்த்தம் தொணிப்பது விந்தையாக உள்ளது | ||||||
| ******* | ||||||
| sowmya |
||||||
| ஜன்னல் அருகே அமர்ந்திருந்தும்.... உன்னுடனான பேருந்து பயணத்தில் வேடிக்கை பார்க்க வெளியே எதுவுமில்லை | ||||||
| ******* | ||||||
| வசந்தன். |
||||||
| தூக்கத்தில் விழித்திருந்ததாய் ஒரு கனவு. எழுந்த பின் கனவில் தூங்கி விட்டேன். | ||||||
| ******* | ||||||
| வசந்தன். |
||||||
| என்னை பயமுறுத்துவதே உனக்கு வேலையாகி போனது. தயவு செய்து என் மீதான அன்பை குறைத்துக்கொள். | ||||||
| ******* | ||||||
| Iyyanars* |
||||||
| கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்டதாலேயே,உண்மையில் உங்களால் `கடவுளை`உணர முடிவதில்லை! | ||||||
| ******* | ||||||
| குழலி :) |
||||||
| என்னை நம்பாதே என வெளிப்படையாகக் கூறுபவர்களின்மீது ஏனோ உடனே நம்பிக்கை வந்துவிடுகிறது. | ||||||
| ******* | ||||||
| குழலி :) |
||||||
| நாம் புரிந்துகொண்டபின், மேலும் சுவாரசியமாகிவிடுகிறார்கள் சில மனிதர்கள். . |
செவ்வாய், 12 மார்ச், 2013
செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet
more details pls click the link below
https://www.facebook.com/pages/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/239983426107165
வெள்ளி, 15 பிப்ரவரி, 2013
ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
Thank info
Puthiya Thalaimurai

வியாழன், 7 பிப்ரவரி, 2013
எழுதவேண்டும்
எதையாவது எழுதவேண்டும் என்றே நினைக்கிறேன்,அனால் எழுதுவது இல்லை..
அது தயக்கம் காரணமாகவே தான் என்பதில் ஐய்யமில்லை எனக்கு(அப்படி என்னத்த எழுதபோற) ....ஏனென்றால் இந்த வலையுகத்தில் நிறையவே எழதுகிறார்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து காணமல் போய்விடுவோமோ என்கிற பயம் தான் முதல் காரணம்.
இன்று முதல் எதையாவது கிறுக்கி வைப்போமே என்று விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன்..

வெள்ளி, 22 ஜூன், 2012
மாற்றம்
இந்த வார்த்தை தான் ஒபாமாவுக்கும் இன்றைய இளையதலைமுறைக்கும் பிடித்த ஒரு வார்த்தை,இன்றைய நிலையில் அரசியலில் இளையதலைமுறையின் உழைப்பால் தான் நாம் நினைத்த மாற்றம் கிட்டும் என்பது மறுக்க முடியாத கருத்தாகவே உள்ளது.
அதனால் தானோ என்னவோப் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு இளையதலைமுறையை கவர என்னுகின்றன. ஆனால் இந்த தலைமுறையினரை கவரகூடிய தலைவர்கள் இல்லை என்பது தான் நிதர்சனம் ..
திரு.அண்ணா மற்றும் திரு.கருணாநிதியால் கவர பட்ட முந்தய தலைமுறையினர் திராவிட இயக்கத்தின் வேராகவும் துன்கலாகவும்
இருந்தனர் இப்போதும் இருக்கின்றனர், ஆனால் இன்று திரு. கருணாநிதியால் கூட இந்த தலைமுறையை கவர முடியவில்லை.
காரணம் இன்றைய தலைவர்களின் சுயநலபோக்கு.
என் மக்கள் என்பதை தன குடும்பம் மட்டுமே என்று என்னும் போக்கு..
தந்தை ஒரு துறையில் இருந்து வெற்றி பெற்றால் அதனை பின்பற்றி புதல்வர்களும் வருதல் என்பது வரவேற்க்கதக்கது என்றாலும்,சமூக பணி யென்பது சொத்துக்களை குவிக்கும் தொழில்லை என்பதைஉணரவேண்டும் முதலில்.பொதுவுடைமை கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட இன்றைக்கு கோடிகணக்கில் சொத்துக்கள் உள்ளன.முழுக்க மக்களுக்கு பணியாற்றும் அவர்களுடன் சேர்த்தே இருக்கும் தலைவர்கள் இன்றைக்கு இல்லை என்பது
உண்மை.
திரைபடங்களில் பார்க்கும் கதாநாயகர்கள் கூட வாழ்க்கையில் அப்படி நடந்துகொள்வார்களா என்பது கேள்வி குறியே..
சரிஆன்மிகம் மூலமாக பின்பற்றலாம் என்றால் அவர்களின் சொத்து கணக்கை விட சர்ச்சை கணக்கு தான் அதிகமாக உள்ளது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு இப்போ நமக்கு பின்பற்ற ஒரு கொள்கையோ அல்லது தலைவனோ தேவையா என்ன?என்று அப்படியே விட்டு தொழைகாட்சி ,முன் உட்காந்து கொள்கிர்ழ்து இந்த தாளை முறை..
ஒரு கோடி யாருக்கு பாக்கலாம் என்று..
,
வியாழன், 12 ஏப்ரல், 2012
காதல்
காதல் சுரப்பிகளை சூத்திரம் கொடுத்து கணக்கிட்டு கவுத்து விடும் கணக்குபுத்தகமோ,
அல்லது வாழ்க்கை வரலாற்றை மாற்றியமைக்கும் அறிவியல் பாடமோ தெரியாது!!..
காதலை கடந்து வராதோர் உலகில் இலர்.இருப்பினும்
வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத மானுடம் பல உண்டு.
காதலின் ஆணிவேர் இறந்தகால பதிவுகளில் காணலாம்...
தனக்கு பிடித்த ஆசிரியரோ(யையோ),அம்மா(அப்பா) வோ,தங்கைகளும் அண்ணன்களும்,
பக்கத்துக்கு விட்டு அத்தைகளும் மாமாக்களும் காதலிகலகவும் காதலனாகவும் தேடிபெருகிறார்கள்.
இது உளவியல் ரீதியான உண்மை..
திங்கள், 12 செப்டம்பர், 2011
Electric Box - K.R. Sridhar
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ்லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பதுபற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியைமேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டுகண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி,அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.
இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல்நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப்,அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்டமுதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாகஇருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன்விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர்உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கைஎரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்''என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும்400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை......

திங்கள், 1 ஆகஸ்ட், 2011
சளி, இருமல் மற்றும் தும்மல
பாதிக்கப்பட்டவங்களை மட்டுமில்லாம, பக்கத்துல உள்ளவங்களையும் சேர்த்து இம்சிக்கிற பிரச்சினை சளி, இருமல் மற்றும் தும்மல். பிறந்த குழந்தைலேர்ந்து வயசானவங்க வரை யாரையும் ஜலதோஷம் விட்டு வைக்கிறதில்லை. பச்சைத்தண்ணி குடிச்சா ஆகாது; தயிர்சாதம் சாப்பிட்டா அவ்வளவுதான்னு சிலருக்கு எது சாப்பிட்டாலும் உடனே சளி பிடிக்கும். இன்னும் சிலருக்கு ராத்திரி 12 மணிக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டா கூட சளியே பிடிக்காது. காரணம்... நோய் எதிர்ப்பு சக்தி!
அந்த சக்தி சரியா இருக்கிறவங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் வர்றதில்லை. அசுத்தமான சூழல், ஜலதோஷம் வந்தவங்க சரியா கைகளை சுத்தம் செய்யாதது, தும்மறது... இப்படி நுண்ணுயிர்க் கிருமிகள், அடுத்தவங்க உடம்புக்குள்ள போறதாலதான் சளி பிடிக்குது. ஏ.சி.ரூம், சினிமா தியேட்டர்... இந்த மாதிரி இடங்கள்ல இருக்கிறப்ப, ஒருத்தர்கிட்டருந்து மத்தவங்களுக்கு சுலபமா ஜலதோஷம் பரவும். ஜலதோஷம் வந்தவங்க சில சுகாதார வழிகளைக் கடைப்பிடிச்சாலே, இதைத் தவிர்க்கலாம்.
அந்தக் காலத்துல லேசா ஒரு தும்மல் போட்டாலே, சட்டுனு ஒரு கஷாயமோ, கை மருந்தோ கொடுத்து சரியாக்கிடுவாங்க. இறுகிப்போன சளியை நீர்க்க வச்சாதான், அது கரைஞ்சு வெளியேறும். அப்படிப்பட்ட மருந்துகள் அந்தக் காலத்துல நிறைய இருந்தது. இன்னிக்கு எதுக்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து, அதோட பக்கவிளைவா வேற ஏதாவது பிரச்சினை, அப்புறம் அதுக்கு மருந்துன்னு தொடர்கதை ஆயிடுச்சு.
சளித் தொந்தரவுக்கு முக்கியத் தேவை வைட்டமின் சி. எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடின்னு இது ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியது. ஆனாலும், "எலுமிச்சம்பழம் சாப்பிட்டா சளி பிடிக்கும்"ங்கிற மாதிரியான தவறான நம்பிக்கைதான் நமக்கு அதிகம். வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, பூண்டு, குடமிளகாய், தயிர் - இதெல்லாம் ஜலதோஷத்தை விரட்டக்கூடியது. புகை பிடிக்கிறவங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காரணம், அவங்களுக்கு வைட்டமின் "சி" இல்லாதது. இவங்களுக்கு தினசரி 300 மி.கி வைட்டமின் "சி" அவசியம்.
சளி பிடிச்சா சூடா ஒரு டம்ளர் பால் குடிக்கிறவங்க பலர். பால், சளியை அதிகப்படுத்தும். வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்த வெஜிடபிள் சூப், தொண்டைக்கு இதம் தந்து, சளியை விரட்டும். அதிக காரம் சாப்பிடறவங்களுக்கு சளி பிடிக்கிறது கம்மியா இருக்குமாம்.
சைனஸ் தொந்தரவால் நெற்றி, கண், மூக்கை சுத்தி நீர் சேரும். அப்ப பூண்டும் தூதுவளையும் சேர்த்து காரமா ஒரு குழம்போ, ரசமோ வச்சு சாப்பிட்டா, சட்டுனு குணம் தெரியும். கற்பூரவல்லி இலைக்குக் கூட சளியைக் கரைக்கிற குணம் உண்டு. இதைக் கஷாயமா வச்சு சாப்பிட விரும்பாதவங்க, ரசத்துல சேர்த்து சாப்பிடலாம்.
சிவப்பு முள்ளங்கியைத் துருவி அதுல கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, கிராம்பு தட்டிப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறது ஜலதோஷத்தால உண்டான தொண்டைக் கமறல், எரிச்சலைப் போக்கும்.
முட்டைக்கோஸை பொடியா நறுக்கி, கொஞ்சமா தண்ணீர் விட்டுக் கொதிக்க வச்சு, வடிகட்டி, உப்பும் மிளகுத் தூளும் சேர்த்துக் குடிக்கிறதும் பலன் தரும்.
ஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டவங்க மூச்சு விட சிரமப்படுவாங்க. பூண்டு, இஞ்சி, மிளகு, லவங்கம் சேர்த்த உணவுகள் இவங்களுக்கு உதவும். புதினா, வெந்தயம், பார்லி கீரையும் நல்லது. இவங்க தவிர்க்க வேண்டியது அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் போன்ற அயிட்டங்கள்.
காளான், பச்சை வெங்காயம், தூதுவளைக் கீரை- இந்த மூணையும் அடிக்கடி உணவுல சேர்த்துக்கிறவங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவுகூட முழுக்க சரியாகுங்கிறது அனுபவஸ்தர்கள் சொல்லக் கேட்டது.
வியாழன், 30 ஜூன், 2011
கண்ணம்மா என் காதலி - 3
முகத்திரை களைதல
லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் - துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்? - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே - கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ?

செவ்வாய், 28 ஜூன், 2011
பாரதியார் பாடல்கள்
கண்ணம்மா என் காதலி
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!
ஞாயிறு, 12 ஜூன், 2011
நட்புக்காலம
கவிஞர் அறிவுமதி
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....
*******
நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ
*******
அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்
*******
தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்
*******
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு
*******
பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு
*******
நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்
*******
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
*******
உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன
*******
போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்
*******
'எனக்கு மட்டும்' என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது
நட்பு
*******
தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கைஎன்று
*******
கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன
*******
தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில் இருக்கிறது
*******
காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று
*******
பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்
*******
தூங்கு என்று
மனசு
சொன்னதும்
உடம்பும்
தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது
*******
சேர்ந்து
நிழற்படம்
எடுத்துக் கொண்டு
அடிக்கடி
மடல் எழுதுவதாகச்
சொல்லிக் கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
மனைவியிடமும்
பிள்ளைகளிடமும்
பேத்திகளிடமும் கூட
சிரிக்கச்
சிரிக்கப்
பேசுகிறார்கள்
இவர்கள்
*******
கண்களை வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்
*******
ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்துத்
தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லிப்
பரிகசித்தன
என் தலையணையில் சில
மல்லிகைகள்
*******
என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்
*******
இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக் காற்றுகளால் நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத்
தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து, தூங்கி,
சாப்பிட்டு, படித்துப்
பேசாமலேயே
இறங்கிப் போக பெண்ணே
உனக்குக் கற்றுக்
கொடுத்தது
யார்
*******
அந்த
மொட்டை மாடியின்
வெளிச்சம்
குறைந்த இரவின்
தனிமையில்
நம்மை
அருகருகே
படுக்க வைத்துவிட்டு
நாம்
பேசிக்கொண்டே
போய்வந்த
பாதைகளைத் தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து
பார்க்கின்றன
*******
நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்
*******
துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும்
துளி
என்கிறது
நட்பு
*******
உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற
எல்லையை
ஒரு நாள் தற்செயலாக
நான்
மீறிவிட்ட
கோபத்தில்
ஏறக்குறைய
நாற்பது நாள்கள்
என்னோடு நீ
பேசாமல்
இருந்தாய்
ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன் மறுபடியும்
புதிதாய்
நான்
*******
உனது சிறிய பிரிவிற்கான
வலியைச்
சமாதானப்படுத்திக்
கொள்வதற்காகப்
பெரிய
பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள்
நிறைந்த
அந்த
விமான நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு
வந்தேன்
*******
ஆய்வை முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்
உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே எனக்குச்
சொல்லிக் கொடுத்தான்
*******
எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது
******
ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலிகேட்டு
வந்து திறந்தேன்
காதலனோடு
கைபிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய்
போய் வருகிறேன்
அடுத்த வாரம் சந்திக்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக் கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி
*******
போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை
சனி, 28 மே, 2011
தந்தைப்பெரியார் ஈ.வெ. ராமசாமி புரட்சி மொழிகள் :-
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
- பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
- மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
- விதியை நம்பி மதியை இழக்காதே.
- மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
- மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
- பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
- பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
- பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
- தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
- கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
- ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
- ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
- வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
- ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
- என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
- எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
- மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
பகுத்தறிவு என்பது யாதெனில் நாத்திகம் பேசுவது மட்டுமல்ல,ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கான விடையாக இருக்க வேண்டும் என்பதையே தந்தை சொல்கிறார்,மேலும் அவர் தன கருத்தை திணிக்க நினைக்க வில்லை.நம்மையும் சேர்த்து சிந்திக்க சொல்கிறார்.
சிறந்த தலைவர்....
செவ்வாய், 10 மே, 2011
கொஞ்சம்...
எனக்காக சேர்த்து வைத்த தினங்களை ..
அம்மாவுக்கு கொஞ்சம்...
அப்பாவுக்கு கொஞ்சம்..
தம்பிக்கு..சிறிதளவு...
காதலிக்கு..கொஞ்சம்..
மனைவிக்கு கொஞ்சம்...
பிள்ளைக்கு பெருமளவு...
என இவர்களுக்காக வாழ்த்துவிட்டேன்......
எனக்காக..வாழ முடித்தது
என் நண்பர்களுடன் தான்..
அம்மாவுக்கு கொஞ்சம்...
அப்பாவுக்கு கொஞ்சம்..
தம்பிக்கு..சிறிதளவு...
காதலிக்கு..கொஞ்சம்..
மனைவிக்கு கொஞ்சம்...
பிள்ளைக்கு பெருமளவு...
என இவர்களுக்காக வாழ்த்துவிட்டேன்......
எனக்காக..வாழ முடித்தது
என் நண்பர்களுடன் தான்..
வெள்ளி, 4 மார்ச், 2011
தமிழ் இனி மெல்ல சாகும்
படிக்கும் போதும் எம் மொழி பற்றி அறிய முற்படவில்லை..
படித்தபின் வேறு ஒரு நிலை..
வேறு ஒரு பயணம்..
வேறு ஒரு வீடு...
வேறு ஒரு மொழி..
என்று வாழ்க்கை ஓட்டத்தை ரசிக்கும் எம் தோழரே கேளுங்கள்..
என் தாயிற்க்கு தெரியாத மொழி
எப்படி என் தாய்மொழியயிர்று ..
உலகத்தோர் அனைவரும் எம்மொழி பின் பற்ற துடிக்கையில்..
இவன் மட்டும் அந்நியம் தேடுகின்றான்..
உலகத்தோர் அனைவரும எம் இலக்கியம் தேடுகையில்..
அந்நிய மொழி வேட்கை கொள்கிறான்...
பல லட்சம் நூற்றாண்டுகள் பயணித்த மொழியினை..
சில நூற்றாண்டுகள் கடத்தவன் மொழி கொண்டு ஆள்கிறான்..
உணர்வுகளால் உயிர்தேல வேண்டிய தோழ்களை கொண்டு
அந்நிய மொழி தாங்கி நிற்கிறான்....
மொழி என்பது அறிவு எனும் என் தோழா..
பாரதி கற்றது முன்று மொழி இலக்கியங்கள்
எனினும்...
யாம் கண்ட மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம் என்றார்...
அவரை விடவா உனக்கு இலக்கியம் தெரியும்...
விழிபடயாத உன்னிரு கண்கள் மூடியே கிடக்கட்டும்..
நீயும் விழிக்க மாட்டாய்....
விழித்தவனையும் கேளிசெயவாய்..
எதில் குற்றம் கண்டாய்நீ வெறுக்க...
எம் இலக்கியத்தில்
நீ தேடும் அந்தனையும் உண்டு..
காமம்..காதல்..
மதம்..ஒற்றுமை..
சமூகவியல்...அறிவியல்..
பக்தி...தொழில்...
என்ன இல்லை எம்மிடம்....
விழித்தால் ் தான் தெரியும்...
முடியும் என்று முயற்சித்து பார்..
தொட்ட பின் விழக முடியாது உன்னால்..
சனி, 26 பிப்ரவரி, 2011
பெண்ணியம்
இன்று பிறந்த
பெண் சிசுவே கேள்
கலாச்சாரம்,பண்பாடு
பெண்ணிய புராணம்
காரணமாய் இங்கு
பிறந்திட தவமிருதாயானால்
ஒரு முறை கேள் பிறக்கும் முன
்
நீ மழலை பருவம் எய்தும் வேளையில்
உன் பாதம் வருடி கொஞ்சி
மகிழும் இவ்வுலகம்
உன் பருவ வயதில்
கொள்ளிக்கண்களால
உன் அழகை சுட்டெரிக்கும்
உடல் உபாதை,தேற்றல் தேடும் ்
வேளைதனில் ஆறுதலுக்கு பதிலாய்
தீட்டு என்று
கிழ்சாதி பெண்ணாய்
தள்ளி வைக்கபடுவாய் மறவாதே
சாமியும் பெண் என்று உணராதவர்கள்..
இது தான் உலகம்
என எண்ணி நீ உன் விழிதலர்த்தும்
வேளைதன்னில் இவன்தான் உன் ஆடவன்
என உன் அருகே ஒருவன் வந்தமர்வான்
உன் தலை குட்டபெற்று
நீ தலைகுணிவாய
இது தான் தருணம் என
உன் கழுத்தில் கயிறு கட்டி
உன்னை தன அடிமையாக்கி கொள்வான் உன் மணாளன்
ஊரே அவனை அதிகாரம் செய்ய
அவன் உனை அதிகாரம் செய்வான்
நீ தலை குணிவாய
்
அடுபங்கரை,பள்ளியறை
உன் உலகமாகி போகும்
இரண்டாவது முறை
விழித்துக்கொள்ள முற்படும் போது
உன் மடியில் மழலை சுமப்பாய்
இவனாவது தன ஆடவன்
போலில்லாமல் நல்லவனை போல்
வழத்திட எண்ணி தோற்று போவாய்
அவனுக்கு தன்னை போல்
ஒரு உமையவள் தேடியளைவாய்
அவளது உலகம் வேறாய் இருக்கும்
அவள் பிறந்தவுடன் அதித அன்பு சுததிரதுடன் வழர்த்தவள்
உடை சுருக்கி
அழகை மிளிரசெய்துவழர்த்தவள்
கிழித்த உடை அநாகரிகம் என நினைத்த ஊரில்
கிழிந்தால் தான் நாகரிகமாகி போயிருக்கும.
்
மது மாது,பொன்னாசை பெண்ணாசை
இதில் கெட்டது உடன் ் சேர்த்தால்
அவளும் செர்த்திருப்பால் அதுடன்
ஜீன்ஸ் டி ஷர்ட் அவள் உடையாகி இருக்கும்
தமிழென்றால் எந்த ஊரென்று
தங்க்ளிஷ்ல் பேசிடுவாள்
கேட்டல் இது தான் பெண்ணியம் என்பால
்
நல்லவளேன்று மகனுக்கு முடிப்பாய்
இதுநாள் வரை தான் வாங்கிய குட்டுகளை
அவளுக்கு அழிக்க எண்ணி
அவளுடன் குடுமி பந்தம் காண்பாய்
ஆனால் அவளது மந்திரத்தால்
உன் மகனை கொண்டே
முதியோர் காப்பகம் சேர்க்கபடுவாய்
இப்போது உன்னுடன் சேர்த்து உன் மணாளன் தலையும் குனியும்
தன மகனுடன் பேரனையும் காண
வாரங்கள் மாதங்கள் வருடங்கள் என
காத்திருப்பாய் .....
ஒன்றை மட்டும் மனதில் கொள்
அதித கட்டுப்பாடும்
சுததிரமும் பெண்ணியம் இல்லைஎன்பதை
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
வறுமை
கடை வீதிகளில் பயணிக்கையில்
சாலை ஓர கடைகளில்
ஆடைகள் விற்கும்
விடலைகளையும்
சாலை நிருத்தகளில்
தன மழலையால்
கைவிடப்பட்ட
மூதாட்டியின்
வயிற்று கெஞ்சலும்
இரக்கமில்லா இறைவனால்
உறுப்புகளை இழந்து
மாற்று திறன் தேடவும்
பட்டினி பிணி தீர்க்கவும்
மனிதம் மறந்த
மாந்தர்க்கு நடுவே
கையேந்தும்
சில உயிரினங்களும்
இன்றைக்கு குடிக்க
ஒரு கடி கிடைதாள்
போதுமென்று நிறுத்தங்களில்
கனத்த தனது குரலில்
உரத்து இசைக்கும்
மறைத்த முதல்வரின்
பாடல் வரிகளை
பெருமிதம் மற்றும்
சற்று தருக்குடன் இசைக்கும்
பெரிசுகளை
பார்க்கும் பொழுது
இவர்களுக்கும்
வாழ்வுண்டு என தோன்றும்
ஆனால் மாற்றம் எப்போது......
சனி, 12 பிப்ரவரி, 2011
தாய்
நானுறங்கும் வேளைதன்னில்
என் விழிபார்த்து
தன் விழிபரிவுகாட்டுவால்
சிறு இடரலேனும்
ஏற்படாவண்ணம்
என்னை வழ்ர்தேடுப்பால் என் தாய்.....
என் விழிபார்த்து
தன் விழிபரிவுகாட்டுவால்
சிறு இடரலேனும்
ஏற்படாவண்ணம்
என்னை வழ்ர்தேடுப்பால் என் தாய்.....
வியாழன், 13 ஜனவரி, 2011
இனிய பொங்கல் வாழ்த்துக்கல் நண்பர்களே
இதோ பொங்கல் வந்து விட்டது
என் போன்ற நகர வழ்க்கையலனுக்கு
விடுமுறை தினம்
தொலைகாச்சி விடுமுறை தின
நிகழ்ச்சி காணும் நாள்
ஆனால் எம் உழவனுக்கோ
கவளம் உணவளிக்கும்
பூமி தாயினை வணங்கவும்
நிலத்தினை செழுமை காண செய்யும்
ஆதவனுக்கு நன்றி கோறவும்
உயிர் தோழன் மாட்டுடன்
தோழமை கனவும் உகந்த நாள்
எம் உழவனுக்கு இந்த நாள் முதல்
பொங்கல் பொங்குவது போல்
மகிழ்ச்சி பொங்கட்டும்
கரும்பின் சுவை போல்
செல்வா சுவை பெருகட்டும்
மென வாழ்த்துகிறேன்......
இதோ பொங்கல் வந்து விட்டது
என் போன்ற நகர வழ்க்கையலனுக்கு
விடுமுறை தினம்
தொலைகாச்சி விடுமுறை தின
நிகழ்ச்சி காணும் நாள்
ஆனால் எம் உழவனுக்கோ
கவளம் உணவளிக்கும்
பூமி தாயினை வணங்கவும்
நிலத்தினை செழுமை காண செய்யும்
ஆதவனுக்கு நன்றி கோறவும்
உயிர் தோழன் மாட்டுடன்
தோழமை கனவும் உகந்த நாள்
எம் உழவனுக்கு இந்த நாள் முதல்
பொங்கல் பொங்குவது போல்
மகிழ்ச்சி பொங்கட்டும்
கரும்பின் சுவை போல்
செல்வா சுவை பெருகட்டும்
மென வாழ்த்துகிறேன்......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)